2024 மே 03, வெள்ளிக்கிழமை

ராமர் கோவில்: ஒரு பெண்ணின் ’அல்லாஹ்ஹூ அக்பர்’ முழக்கம் அதிர வைத்தது

Editorial   / 2024 ஜனவரி 22 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா மாநிலத்தில் ராமர் கோவில் கொண்டாட்டங்களின் போது பெண் ஒருவர் எழுப்பிய அல்லாஹ்ஹூ அக்பர் முழக்கம் ஷிமோகாவை அதிர வைத்தது.

அயோத்தியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு விழா இன்று (22) நடைபெற்றது.

நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள், திரை நட்சத்திரங்கள் என 7,000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பிரதமர் மோடி, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து கருவறையில் வழிபாடு நடத்தினார். பின்னர் ராமர் கோவில் வளாகப் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்றினார்.

ராமர் கோவில் திறப்பு விழாவை நாட்டின் பல பகுதிகளிலும் ராம பக்தர்கள் கொண்டாடினர். கர்நாடகா மாநிலத்திலும் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் களைகட்டின. கர்நாடகாவின் ஷிமோகாவில் ஷிவப்பா நாயகா சர்க்கிள் பகுதியில் ராமர் பக்தர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர் வாகனத்தை நிறுத்தி படம் பிடித்தார். அப்போது பொலிஸார் அங்கு வந்து இருசக்கர வாகனத்தை அங்கிருந்து நகர்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.

 

தனால் அந்த பெண்ணுக்கும் பொலிஸாருக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அங்கு குவிந்த ராம பக்தர்கள், ஜெய் ஶ்ரீராம் என முழக்கங்களை உரக்க எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

அப்போது அப்பெண் திடீரென அல்லாஹ்ஹூ அக்பர் என பதில் முழக்கம் எழுப்ப அந்த இடமே ஒரு நிமிடம் அப்படியே ஆடிப் போனது. பின்னர் அப்பெண் குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. அப்போது ஜெய்ஶ்ரீராம் முழக்கங்கள் எழுப்பி கொண்டு தம்மை சூழ்ந்த மாணவர்களுக்கு எதிராக மாணவி முஸ்கன், அல்லாஹ்ஹூ அக்பர் என ஓங்கி முழக்கமிட்ட சம்பவம் நாட்டில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .