Editorial / 2021 ஜூலை 29 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்களாக வேலைச்செய்த மேலும் 5 யுவதிகளிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அந்த ஐந்து யுவதிகளும் டயகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர், அவர்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனாரா? ஏனைய துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொழும்பிலிருந்து சென்றிருக்கும் விசேட பொலிஸ் குழுக்களே இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலும் 11 யுவதிகள் பணியாற்றியுள்ளனர். அதில், மரணமடைந்த டயகமவைச் சேர்ந் 16 வயதான சிறுமியும் அடங்குகின்றார்.
ஏனைய 10 பேரில், ஐவரிடமே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஏனையோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அதனூடாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்நிலையில், அந்த வீட்டில் பணியாற்றிய மேலும் மூன்று யுவதிகள் மர்மானமுறையில் மரணமடைந்துள்ளமையும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. அதிலொரு பெண், பம்பலப்பிட்டியவில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்களாக வேலைச்செய்தவ 11 யுவதிகளும் டயகம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago