2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’ரூ. 1,000க்கு மஹிந்த சம்மதம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமாக, 1,000 ரூபாயை வழங்குவதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ சம்மதித்துள்ளார் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று (27) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இ.தொ.கா, புதிதாகப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை, பெருந்தோட்டக் கம்பனிகளே தீர்மானிக்கின்ற நிலையில், அது எவ்வாறு சாத்தியப்படும் என, ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்டபோது, 1,000 ரூபாய் ஊதியத்தை அடைவதற்கு வேறு வழிகள் காணப்படுகின்றன என, அவர் பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .