2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘லக்ஸ்மனுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம்’

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்னவுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளையும் வழங்க வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாக ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சாமர் சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

லக்ஸ்மன் செனவிரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறும் சாமர சம்பத் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, ஐக்கிய மக்கள்  சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் செனவிரத்ன ஆளுந்தரப்புடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .