2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

லண்டனில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் கண்காணிப்பில்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வர முடியாத நிலையில் இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர், இன்று (19) மதியம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான யு-எல்-504 எனும் விமானம் மூலம் லண்டன் நகரில் இருந்து குறித்த பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 16 கண்காணிப்பு நிலையங்களுக்கு இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .