2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

லலித், ஜயந்த, நிஸ்ஸங்க, நலினிடம் இன்று விசாரணை

Menaka Mookandi   / 2016 மே 31 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது, ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமற்போத காணாமற்போனதாகக் கூறப்படும் வாகனங்கள் தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (31) அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை, அனுமதியின்றிப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக, தேசிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீரவும், மேற்படி பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (31) அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அவன்கார்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தரான ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியும், இன்றைய தினத்திலேயே, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெற்ற உற்சவமொன்றின் போது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியின் போது, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரபல பாடகரும் மேரியன்ஸ் இசைக்குழுவின் தலைவருமான நலின் பெரேரா, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (31) அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .