2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வாக்களிப்பு பிந்தியமைக்கு ஜே.வி.பி விமர்சனம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் விடயம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்றும், கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வாக்களிப்பைப் பிற்போடுவது தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியமையே இதற்கான காரணமாகும்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுர குமார திஸாநாயக்கவும் ஜே.வி.பி
நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளிடையே கருத்தொற்றுமை காணப்படும் நிலையில், இதற்கான வாக்களிப்பைப் பிற்போட்டமை ஏனெனக் கேள்வியெழுப்பினர்.

கருத்தொறறுமை ஏற்பட்டுள்ள நிலையில், தீர்மானத்தை தடுத்து நிறுத்துவது எதுவெனக் கேள்வியெழுப்பிய அநுர குமார திஸாநாயக்க, 'எங்களுக்கு நாடகம் காட்டாதீர்கள்' எனத் தெரிவித்தார்.

கருத்துத் தெரிவித்த ஹந்துன்நெத்தி, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு யார் உண்மையில் விரும்புகிறார்கள் என்பதும் யார் அதைத் தடுக்க விரும்புகிறார்கள் என்பதும், தமது கட்சிக்குத் தெரியுமெனத் தெரிவித்தார். இதற்கான தீர்மானம், ஜனவரி 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதற்கான விவாதம் முதலில், ஜனவரி 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், இரண்டு நாட்களாக விவாதித்த பின்னரும், வாக்களிப்பைப் பிற்போடுவது ஏனெனக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒட்டுமொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும், தீர்மானம் தொடர்பில் கருத்தொற்றுமை ஒன்றுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டுமென்பதற்காகவே, வாக்களிப்புப் பிற்போடப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .