2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வேட்பாளரை அவமதித்த வழக்கு: 12பேரும் ஆஜர்

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிரணியின் பொதுவேட்பாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை அவமதிக்கும் வகையில், வயதுகுறைந்த பிள்ளையைப் பயன்படுத்தி சுயாதீனத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ். அமரசேகரவின் முன்னிலையில், நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில், மேற்கோள்காட்டப்பட்ட கோப்புகளை சட்டமா அதிபர், பரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று, அரச சட்டத்தரணியான வருணி ஹெட்டிகே, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

வயதுகுறைந்த பிள்ளையைப் பயன்படுத்தி, விளம்பரமொன்றைத் தயாரித்து, அவ்விளம்பரத்தை ஜனாதிபதித் தேர்தலின் போது விளம்பரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் செய்திப் பணிப்பாளர் சுதர்மன் ரதலியகொட உள்ளிட்ட 12 பேருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .