2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபத்துகளைத் தடுப்பதற்காக விசேட வேகக்கட்டுப்பாடு நிலையங்கள்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெறும் விபத்துகளைக் குறைப்பதற்கு எதிர்வரும் மாதங்களில், விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் ஸ்தாபிக்கவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துச் செயற்பாடுகள் குறித்தான நிறுவனத்தின் இயக்குநர் எஸ். ஓபநாயக்க தெரிவித்தார். 

மேலும், வேகக்கட்டுப்பாட்டினை மீறும் வகையில் செயற்படும் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்புத் திட்டங்களை மேன்மைப்படுத்தியே, இந்தப் பாதுகாப்புச் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .