2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மர் காயம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யக்கல, அளுத்கமப் பகுதியில் பஸ்ஸும் வானும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த வானும், கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X