2025 மே 22, வியாழக்கிழமை

விபத்தில் 34பேர் காயம்

Thipaan   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பதியத்தலாவை பகுதியில், தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 34 பேர் காயமடைந்துள்ளதாக, பதியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரத்ன சிங்க தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 22 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார், மஹியங்கனை, பதியத்தலாவை வைத்தியசாலைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றள்ளது.

இவ் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X