2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வேறு கூட்டங்களிலில் பங்கேற்கும் சு.கவினருக்கு எதிராக நடவடிக்கை

Thipaan   / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது மேதினக் கூட்டத்தை காலியில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்காமல் வேறுகூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக் கட்சியில் பிரதான பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தையின் போது, கட்சியைப் பாதுகாப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டி நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போதே, சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்காமல் வேறுவேறு மேதினக்கூட்டங்களில் பங்கேற்கும் சு.க உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம், கொழும்பு-02, ஹைட்பார்க்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையிலேயே, இவ்வாறான கடுமையான தீர்மானத்தை சு.கவினால் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அத்தகவல் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X