2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வெளியில் வந்த நளினி மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, தனது தந்தையின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக இன்று(24) சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

12 மணி நேரம் மட்டுமே பரோலில் சென்று வர நளினிக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று புதன்கிழமை(24) காலை 6.50 மணியளவில் நளினி சிறையிலிருந்து வந்தார். 

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சுமார் 7 பொலிஸ் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் நளினியை சென்னைக்கு அழைத்து வந்ததுடன் காலை 10 மணிக்கு கோட்டூர்புரம் இல்லத்துக்கு நளினி வந்துசேர்ந்தார்.

அதனையடுத்து, 4 மணியளவில் நடைபெற்ற தந்தையின் இறுதி கிரியைகளையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .