2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வெள்ளவத்தையில் ஐந்து பெண்கள் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 15 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, காலி வீதியில் இயங்கி வந்த விபசார விடுதியை நேற்று வியாழக்கிழமை (14) இரவு சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஐந்து பெண்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

ஆயுர்வேத நிலையம் எனும் போர்வையில் இந்த விபசார விடுதியை நடத்தி வந்த 38 வயதுடைய பெண்ணொருவரையும் அங்கிருந்த 20, 21, 38 மற்றும் 40 வயதுடைய நான்கு பெண்களையும் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

ஹன்வெல்ல, புலத்சிங்கள, வவுனியா, கொழும்பு 15 மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் ஐவரையும், கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X