2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வங்கி கொள்ளை: முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல, கஹாஹேனே வங்கியில் கடந்த 10ஆம் திகதியன்று 26 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்த நால்வரில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராந்துகோட்டையில் வைத்தே இவரை, இன்றுக்காலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை கைதுசெய்யும் போது அவரிடம் ஏழுபதாயிரம் ரூபாய் இருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் அவருக்கு 2 இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வங்கியில் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்செல்கையில், மோட்டார் சைக்கிளை குறித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் செலுத்திச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொள்ளைக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மேலும் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார்; தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X