2024 மே 12, ஞாயிற்றுக்கிழமை

வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

Simrith   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், பஹ்ரைன், மொரிசியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் கரீஃப் மற்றும் ரபி பயிர்கள் முந்தைய ஆண்டை விட குறைவாக மதிப்பிடப்பட்டதன் பின்னணியில், சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை எளிதாக்க, தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL) இந்த நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக குறிப்பாக பயிரிடப்படும் 2000 MT வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அதிக விதைச் செலவுகள், நல்ல விவசாய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது மற்றும் கடுமையான அதிகபட்ச வரம்புத் தேவைகளுக்கு இணங்குதல் போன்ற காரணங்களால் வெள்ளை வெங்காயத்தின் உற்பத்திச் செலவு அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X