2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

விசா பிரச்சினைக்கு உடனடி தீர்வை காண வேண்டும் - சனத்ஜெயசூரிய

Freelancer   / 2024 மே 06 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா பிரச்சினைகளிற்கு உடனடியாக தீர்வை காணுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கடும் வியர்வை கண்ணீருடன் பணம்சார்ந்த விடயங்கள் எவற்றையும் எதிர்பார்க்காமல் பல இலங்கையர்களும் நானும் சுற்றுலாத்துறையை மீண்டும் செழித்தோங்க செய்தோம்.

புதிய விசா நடைமுறைகள் குறித்து சுற்றுலாத்துறையை சார்ந்தவர்கள் பல கரிசனைகளை வெளியிட்டுள்ளதை நான் அவதானித்துள்ளேன். 

இந்த விடயத்துடன் தொடர்புபட்ட அனைவரும் இந்த விவகாரத்திற்கு கூடிய விரைவில் தீர்வை காணவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என அவர்தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X