2024 மே 04, சனிக்கிழமை

‛‛வாசுகி’’ கண்டுப்பிடிப்பு

Mayu   / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு நாடுகளில் தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உலகிலேயே மிகவும் நீளமான அதிக உடல் பருமனான பாம்புகளில் ஒன்றான ‛‛வாசுகி’’ இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாம்பு 4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பானந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு சில எலும்புகள் புதை படிமங்களாக கிடைத்தன.

இதன்​போது முன்காலத்தில் வாழ்ந்த ராட்சத முதலை இறந்து பூமிக்கடியில் புதைந்து இருக்கலாம் எனவும், அதன் எலும்புகள் தான் புதை படிமங்களாக இப்போது கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அந்த எலும்புகள் முதலைக்குரியது தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அந்த புதைப்படிம எலும்புகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. அந்த எலும்புகள் எந்த உயிரினத்துக்கானது என்பது பற்றிய ஆய்வு தொடங்கப்பட்டது.

இதற்கமைய, கடந்த 2022ல் ‛‛Largest Known madsoiid snake from warm eocene period of Inida suggests Intercontinental Gondwana Dispersal’’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தலைப்பில் பூமியில் 50 அடிக்கு ராட்சத பாம்பு வாழ்ந்து வந்துள்ளதென கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் புதைப்படிமங்களாக கிடைத்த எலும்புகள் ராட்சத பாம்புக்குரியதெனவும் அனகோண்டா வகையை சேர்ந்ததது எனவும் இந்த பாம்பின் பெயர், ‛வாசுகி' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்து கடவுள்களில் ஒருவரான சிவபெருமானுக்கும் வாசுகி பாம்புவுக்கும் நெருங்கிய பந்தம் உள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. சிவபெருமான் பாற்கடலை கடைய மத்தாக பயன்படுத்தியது ‛வாசுகி' பாம்பை தான். அந்த வகை ‛வாசுகி' பாம்பை சேர்ந்தது தான் இது. இந்த பாம்பு பொதுவாக சூடான பிரதேசத்தில் தான் வசிக்கும். குஜராத்தின் கட்ச் என்பதும் வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .