2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

வசியத்துக்கு பணம் கறந்த பிக்கு கைது

Editorial   / 2025 நவம்பர் 04 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசிய மந்திரம் செய்வதாகக் கூறி தனது வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மனம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களை யூடியூப் மூலம் ஏமாற்றி, அவர் பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தங்காலை, முவன்பலேஸ் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை இரண்டு முறை அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில், துறவி தங்கியிருந்த திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு பொலிஸார்   முறைப்பாட்டாளருடன் இரண்டு முறை சென்றனர். காவல்துறையினரின் முன்னிலையில் முறைப்பாட்டாளரா தேரர் தாக்கதியதால் முறைப்பாட்டாளர் காயமடைந்து   மனம்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

 

அதன்படி, தங்காலையைச் சேர்ந்த புகார்தாரரை காவல் நிலையத்திற்கு முன்பாக குடிபோதையில் தாக்கிய தேரர் கைது செய்யப்பட்டார்.  அவர்,  பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மனம்பிட்டிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

 

இந்த துறவி நீண்ட காலமாக தனது யூடியூப் சேனல் மூலம் பல்வேறு நபர்களை ஏமாற்றி வருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு, வீடுகளைப் பாதுகாத்தல் மற்றும் நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களின்  வங்கிக் கணக்குகளில் இருந்து தன்னுடைய வங்கிக்கணக்குக்கு அதிக அளவு பணத்தை மாற்றியுள்ளதாகவும், இந்த துறவி தனது யூடியூப் சேனல் மூலம் நீண்ட காலமாக  ஏமாற்றி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார்  தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X