Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரூரில் த.வெ.க. பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது,
வேலுசாமிபுரத்தில் நடந்த பரப்புரையின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. த.வெ.க. தலைவரின் வாகனம் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் இருந்து திருகாம்புலியூர் ரவுண்டானா வர 2 மணி நேரமாகியது. சாதாரணமாக 30 நிமிடங்களில் அந்த இடத்தைக் கடந்துவிடலாம். சிறிது நேரம் வாகனத்திலிருந்து வெளியே வந்த த.வெ.க தலைவர், பின்னர் உள்ளே சென்றுவிட்டார். இதனால், அங்கிருந்தவர்களுக்கு அவரை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது என்றார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .