2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வடக்குத் தமிழர்களின் விசனங்களை மோடியிடம் சொல்லுவேன்

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குத் தமிழர்களின் விசனங்கள், இந்தியப் பிரதமர் மோடிக்கு விளக்கப்படும் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ். ஜெய்ஷங்கர், தமிழ்த் தேசியக்; கூட்டமைப்புக்கு உறுதியளித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று புதன்கிழமை(13), கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஜெய்ஷங்கர், இலங்கைக்கு அடுத்தமாதம் விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் விஜயத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

புதிய அரசியலமைப்பின் ஆக்கம், வடக்கில் இராணுவ இருப்பு, தமிழருக்கான அரசியல் தீர்வு ஆகியன தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், வெளிவிவகாரச் செயலாளருக்கு விளக்கினர்.

இதன்போதே, தமிழர்களின் விசனங்கள், மோடிக்குத் தெரியப்படுத்தப்படும் என ஜெய்ஷங்கர் கூறினார்.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X