2024 ஜூன் 17, திங்கட்கிழமை

வடக்கு ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு

Editorial   / 2024 மே 26 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தின் போது வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலார்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என நான்கு மாவட்டங்களிலும் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் மூன்று தினங்களாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி செயலகத்தால் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் நிகழ்வுகளில் செய்தி அறிக்கையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஊடக அமைச்சில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை கொண்டிருந்த வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வுகளுக்கு செல்வதற்கும், செய்தி அறிக்கையிடவும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் வடக்கில் ஜனாதிபதி சென்ற இடங்களில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியின் நிகழ்வு நடைபெற்ற இடங்களுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X