2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வடக்கில் இன்று முதல் மழை

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை தொடக்கம் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டால் கிடைக்கும் மழை என்பதனால் முற்பகலை விடப் பிற்பகலில் அல்லது இரவில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X