Editorial / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை இன்று (27) அதிகரித்துள்ளது. இன்றறைய அறிக்கையின் பிரகாரம் 191 பேர் மரணமடைந்துள்ளனர்.
இன்றைய அறிக்கையின் பிரகாரம் நால்வர் மரணித்துள்ளனர். அவர்களில் கொழும்பைச் சேர்ந்த எவரும் உள்ளடங்கவில்லை.
பிட்ட கோட்ட பிரதேசத்தைச் ரேச்ந்த 66 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றாளராக இனங்காணப்பட்டதன் பின்னர், ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டிசெம்பர் 26ஆம் திகதியன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
இதேவேளை, இராகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 75 வயதான பெண், இராகம வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் டிசெம்பர் 26ஆம் திகதியன்று மரணமடைந்துள்ளார். அப்பெண்ணுக்கு கொரோனா நிமோனியா வைரஸ் மற்றும் மூளையில் ஏற்பட்ட நோயால் மரணமடைந்துள்ளார்.
மூன்றாவதாக கடவத்தையைச் சேர்ந்த 78 வயதான பெண் இராகம வைத்தியசாலையில் இருந்து முல்லேரியாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் டிசெம்பர் 25 ஆம் திகதி மரணமடைந்துள்ளார். அப்பெண் கொரோனா நிமோனியா காய்ச்சால் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில். வவுனியா பிதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண், வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அப்பெண் டிசெம்பர் 26ஆம் திகதி மரணமடைந்தார். அப்பெண்ணுக்கு கொரோனா நிமோனியா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago