Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய, கனேகொட, இஹல ஓமட்டவில் உள்ள ஒரு வீட்டின மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் முன்பக்க ஜன்னல் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல வணிகங்களை நடத்தும் முன்னாள் இராணுவ வீரரின் வீட்டின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் நன்கு அறியப்பட்ட நபராகவும், பாதாள உலகத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்களைப் பெற்ற முன்னாள் இராணுவ வீரரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டின் உரிமையாளரான முன்னாள் இராணுவ வீரர், வீட்டில் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
27 minute ago
36 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
43 minute ago
47 minute ago