2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வேட்பாளரின் சங்கிலி அறுப்பு

Janu   / 2025 மே 06 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைநகர் வேட்பாளர் ஒருவரை  வழிமறித்து, மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலி அறுக்கபட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேட்பாளர் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு வீதியால் பயணித்த வேளை இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் ஒருவரும் மற்றொருவரும் இணைந்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலியையும் அறுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் காரைநகருக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக முறைப்பாட்டினை பதிவு செய்து சென்றுள்ளனர்.

நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X