2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

விமானி நிர்மலின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி (படங்கள்)

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகொப்டர் மூலம்  நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​உயிரிழந்த கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இன்று வியாழக்கிழமை (04) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானையில் உள்ள வீட்டிற்கு  சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அனுரகுமார, விமானியின் மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் தனது  இரங்கலைத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X