2024 மே 17, வெள்ளிக்கிழமை

விமான நிலையத்தில் சர்ச்சை ; வெளிவந்த அவசர அறிக்கை

Freelancer   / 2024 மே 02 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், இதனைக் குறிப்பிட்டுள்ளது.

“கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில்(BIA) விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். 

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .