Janu / 2026 மே 04 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளருமான மேன்மைதங்கிய டோ லாம் (Tô Lâm), எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தைத் தொடர்ந்து, அவரது அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி டோ லாம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இதன்போது, இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
வியட்நாம் ஜனாதிபதி தனது பயணத்தின் ஒரு பகுதியாக பல உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக, “இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா மன்றத்தை” (Sri Lanka–Vietnam Trade, Investment & Tourism Forum) அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

32 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
50 minute ago