2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வர்த்தக குழுவுடன் பாகிஸ்தானுக்கு பயணமானார் ரிஷாத்

George   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பாகிஸ்தானிய வணிக அமைச்சர் குர்ராஹம் தஸ்டிகரின் அழைப்பின் பேரில் 15 பேர் அடங்கிய இலங்கை வியாபாரக் குழுவுடன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று, பாகிஸ்தான் சென்றுள்ளார்.

இலங்கை வியாபாரக் குழுவானது  'டெக்ஸ்போ 2016' முதலாவது ஆடை கண்காட்சியில் பங்குபற்றவுள்ளது. இவ் ஆடை கண்காட்சியானது   கராச்சி ஏற்றுமதி நிலையம், பாகிஸ்தானிய வணிக அமைச்சுடன் இணைந்து பாகிஸ்தானிய வர்த்தக அபிவிருத்தி சபையினால் ஏப்ரல் 7-10 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ஆடை கண்காட்சி நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக  கலந்துக்கொள்ளவுள்ளார். மேலும், பாகிஸ்தானிய வர்த்தக அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் கொள்கை தொடர்பான உரையொன்றினையும் மேற்கொள்ளவுள்ளார்.
 
இலங்கை வியபாரகுழுவானது  பாகிஸ்தானிய வியாபாரக்  குழுக்களுடன் சந்திப்புக்களை நடாத்தவுள்ளதுடன்  இதன் பொழுது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை வர்த்தக சபைகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கைச்சாத்திடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X