2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வரி அதிகரிப்புக்கு முன்னரே இறக்குமதி செய்து சீனியை பதுக்கியுள்ள 3 வர்த்தகர்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனிக்கான இறக்குமதி வரியை  17.50 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு  முன்னரே  வர்த்தகர்கள் மூவர் பெருந்தொகை சீனியை இறக்குமதி செய்து பதுக்கி வைத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர்களால் 60,000 மெட்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு குறித்து இந்த வர்த்தகர்களுக்கு முன்னதாகவே தகவல் கிடைத்துள்ளமையாலேயே இவர்கள் சீனியை இறக்குமதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

30 நாள்களுக்கு 42,000 மெட்றிக் தொன் சீனியே நாட்டுக்கு தேவைப்படும் நிலையில்,  குறித்த வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சீனியால் அவர்களுக்கு 400 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கவுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த வர்த்தகம் தொடர்பில் ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறுக் கோரி, இன்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைபாடு செய்ய இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X