2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி மநகர சபையின் முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வா, இந்த மனுவினை இன்று (03) தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் 6 ஆண்டுகள் பதவி காலத்துக்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டதாகவும் இந்த நிலையில், 5 வருடங்களில் தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X