S.Renuka / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலர்களுக்குள் இருக்கும் சந்தேகம் சில சமயங்களில் கொலை செய்யும் அளவுக்கு ஆழமாகப் பரவி விடுகிறது. இது வெறும் சின்ன சண்டை அல்லது பொறாமை என்று முடிந்துவிடுவதில்லை. அது மனதை முழுமையாக ஆக்கிரமித்து, தர்க்கத்தை மழுங்கடித்து, இறுதியில் இரத்தம் சிந்தும் செயலுக்கு இட்டுச் செல்கிறது. இதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் சந்தேகம் எப்படி தொடங்குகிறது என்பதைப் பார்க்க வேண்டும். காதல் ஆரம்பத்தில் மிக அழகாக இருக்கும். ஒருவரை மட்டுமே உலகமாகப் பார்க்கிறோம்.
ஆனால், அந்த உணர்வு ஆழமாகும்போது, அந்த மனிதரை இழந்து விடுவோமோ என்ற பயம் தோன்றுகிறது. அந்த பயம்தான் சந்தேகத்தின் விதை. என்னை விட்டுப் போய்விடுவாரோ என்ற எண்ணம் தோன்றியதும், சின்ன சின்ன விஷயங்கள் பெரிதாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. போனில் யாரோடு பேசினார்., ஏன் இவ்வளவு நேரம் லேட்., ஏன் இந்த புகைப்படத்தில் இப்படி சிரிச்சிருக்கார். இந்த சின்ன சந்தேகங்கள் முதலில் வெறும் கேள்விகளாகவே இருக்கும்.
ஆனால், பதில் சொல்லாதபோது, அல்லது திருப்திகரமான பதில் வராதபோது, அது வளர்ந்து கொண்டே போகிறது. இங்கேதான் உண்மையான ஆபத்து ஆரம்பமாகிறது. சத்தீஸ்கரில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரோஷினி சூர்யவம்சி என்ற பெண்ணும் கம்தா பிரசாத் என்று இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
ரோஷினியை கம்தா பிரசாத் 'பிளாக்' செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஷினி அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு பிரசாத்தை ஈடு தேடிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சரமாரியாக குத்திக் கொன்ற ரோஷினி சூர்யவம்சியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
14 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago