2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

வறட்சியால் 1,542 குடும்பங்கள் பாதிப்பு

Freelancer   / 2024 மே 07 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 464 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 432 குடும்பங்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடத்தக்கது. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X