Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜூன் 15 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் அறிக்கையிடல் குறித்து FactCheck.lk இன் கவலைகள்'எனும் புதிய விளக்கக்குறிப்பின் படி,இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கல், சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள RMB 10 பில்லியன் (USD 1.4 பில்லியன்) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக சேர்த்ததிலிருந்து உருவாகியுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை.
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 'Balance of Payments Manual, 6th edition'அறிக்கைக்கு அமைய,வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், PBoC நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்றத் தவறியுள்ளது. ஏனெனில், பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.
அந்த வகையில்,வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக, 2025 மே மாதத்தில், மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால், இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும்.
மேலும், இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும், பொது அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (PBoC பரிமாற்றம் சேர்த்ததும், சேர்க்காததும்) பயன்படுத்தி, ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.
சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துப்போகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில், IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் (usable reserves) என குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும். இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்கச் சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago