2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

வவுணதீவு விசாரணைகள் திசை திருப்பப்பட்டன

Freelancer   / 2024 ஏப்ரல் 26 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன?எனக்கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே .வி.பி.)தலைவரும்,எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  பேசுகையில்,

கடந்த 5 வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்திற்கு இடமான விடயங்கள் பல நடந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில்  விவாதிக்கப்படுகிறது.தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக  9 நாட்கள் விவாதிக்கப்பட்டது.இருப்பினும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை.ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் செனல் -04 ஆவணப்படம் வெளியாகியுள்ளது, பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளார், பிரதான சூத்திரதாரியை நாங்கள் அறிவோம் என்று  ஒரு தரப்பினர் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது என்றார். 

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக்ஷர்களின் அரசியல் செயற்பாடுகள்   முஸ்லிம் அடிப்படைவாதம்,இஸ்லாமிய அடிப்படைவாதம்,சிங்கள இனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை மையப்படுத்தியிருந்தது.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இதன்  உச்சகட்டமாகவே இருந்தது என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X