2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்கள் ஒன்றாக மோதியமைக்கான காரணம் வெளியானது

Editorial   / 2021 ஏப்ரல் 14 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் களணிகம ஆகிய பகுதிகளுக்கிடையில், 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்றைய தினம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போது வாகனங்களுக்கிடையிலான தூர இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, இதுவே பத்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள், இது குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X