2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாக்காளர் பெயர்ப்பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தாண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டிலுக்கு அமையவே நடத்தப்படுமென, உதவி தேர்தல்கள் ஆணையாளர் எச்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 15,760,867 எனவும், இந்தாண்டு இதன் எண்ணிக்கை இரண்டு இலட்சங்களால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக மேன்முறையீடு கோரப்பட்டிருந்த காலப்பகுதியில் 8500 மேன்முறையீடுகள் கிடைக்கப்​பெற்றுள்ளனவென்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர் எச்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .