2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வான் வீதியை விட்டு விலகி விபத்து ; நான்கு பேர் படுகாயம்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ .ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை, கண்டி பிரதான வீதி ஐயபுர பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் இன்று (04) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த  குறித்த வானின் சாரதியான பஸ்தியம்பிள்ளை சதீஷ்குமார் (29 வயது), ஏ.சண்முகராஜா (35 வயது) மற்றும் எம்.சுபாஷினி (40 வயது) கொழும்பு, வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ். சுபலோசினி (33 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ​மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வானின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதினால் வீதியை விட்டு விலகியதானாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .