2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

”வாழைத்தோட்டம் தினுக்கவுக்கு” நடந்து என்ன?

Editorial   / 2021 மார்ச் 14 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளிகளின் குழுவைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் வர்த்தகருமான “வாழைத்தோட்டம் தினுக்க” மாரடைப்பு காரணமாக, டுபாயில் மரணமடைந்துள்ளார் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேற்படி நபர், இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர், நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டார்.

அவர், சில நாட்களாக நோய்வாய் பட்டிருந்தார் என்றும் வீட்டிலிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துவிட்டார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதேவேளை, மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X