2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விசேட முத்திரையுடனான அஞ்சல் சேவை இரத்து

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் வழங்கப்பட்டிருந்த அஞ்சல்  சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர்  ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால்,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  தமது கடமையின் நிமித்தம் கடிதங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த,  விசேட முத்திரையுடனான அஞ்சல் சேவை  நிறுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரைகளை,  அஞ்சல் அலுவலகங்கள் பொறுப்பேற்க வேண்டுமென, அவர் பணித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிரூபம்,  சகல மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதிகள், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள், அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அதிபர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .