2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விபசார விடுதி முற்றுகை நால்வர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய பகுதியில், ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த, விபசார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த நால்வரை, நேற்று இரவு (18) கைது செய்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, குறித்த நிலையத்தை முகாமைத்துவம் செய்து வந்த பெண்ணும், விபசார தொழிலில் ஈடுபட்டுவந்த பெண்கள் மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, மாபாகடவெவ, முந்தல் ஆகிய  பகுதிகளைச் சேர்ந்த 30,38,40,43 வயதுகளையுடைய பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .