Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 09 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அதி சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் ஏ - 9 பிரதான வீதியில், மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் நேற்று புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 56 வயதுடைய குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago
7 hours ago