2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுமி உட்பட இருவர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை, ஹேகித்த சந்தியில் நேற்று (28) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

 இதன்போது, 12 வயது சிறுமியும் 21 வயது பெண்ணுமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த கொள்கலன் ஒன்று வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .