2026 மே 05, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெற்றோர் பலி; பிள்ளைகள் படுகாயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

கந்தப்பளை பொலிஸஸ் பிரிவுக்கு உட்பட்ட எஸ்கடேல் தோட்டம் "ஐஸ் பீலி" என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் ஓட்டோ ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை  இடம்பெற்று இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த ஐவரில்  இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்டம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை - மந்தாரநுவர - எலமுல்ல பிரதேசத்தைச்  டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி  குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று (17) காலை எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த ஓட்டோவில் தாய், தந்தை, 06,16,19 வயதுடைய சிறுவன், சிறுமிகள் ஆகியோர்  பயணித்துள்ளனர். 

ஓட்டோவை தந்தை  செலுத்தி வந்த நிலையில், கந்தப்பளை எஸ்கடேல் "ஐஸ் பீலி" என்ற இடத்தில் பிரதான பாதையை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .