2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விமல்,வாசு,கம்மன்பிலவுக்கு இடமில்லை

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வோரை தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் அந்த கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களான விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய சிறிய கட்சிகள் சார்பில்  வேட்மனு தாக்கல் செய்வோரை நியமிக்கும் பொறுப்புகள் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் ஒப்படைக்கபட்டுள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி குழுவில் பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ​பெசில் ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும உள்ளிட்டோர் உள்ளடங்கியிருப்பதாக அறிய முடிகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .