2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வீதி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூலை 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹயஸ் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நயினாதீவு, எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த கிரிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

மேற்படி குடும்பஸ்தர் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் நடத்துனராகக் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் 1:45 மணியளவில் தற்போது வசிக்கும் வீட்டில் உணவருந்துவதற்காக கோண்டாவில் உள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அருகாமையில் மத்திய கோட்டை தாண்டி துவிச்சக்கர வண்டியில் வலது பக்கம் சென்றபோது எதிர் திசையில் வந்த ஹயஸ் வாகனம் அவரை மோதி தள்ளியதில் அவர் இஸ்தலத்திலேயே உயர்ந்துள்ளார்.

இந்த  மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய்  பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .