2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

’வீதியில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை’

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.  

எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.

13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது. 

நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது.19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.

ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும்  என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X