2025 ஜூலை 12, சனிக்கிழமை

வெலிகந்தையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு

Editorial   / 2020 மார்ச் 18 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று வெலிகந்தை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்படுகின்றது.

இதன் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு, சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த பிரிவில் ஸ்தாபிக்கப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில், இட வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின், தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .