2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ.ல.சு. கட்சியின் இணை அமைப்பாளர் பதவிகள் மாற்றம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இணை அமைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொகுதிக்கு ஒரு அமைப்பாளரையும் ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைப்பாளர் என்ற ரீதியில் அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போது இணை அமைப்பாளர்களாக பதவி வகிப்பவர்கள் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டவுடன், மிகுதி இணை அமைப்பாளர்களை மாவட்டம் அல்லது தொகுதி முகாமையாளர்களாக நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சி நடவடிக்கைகளை விரிவாக்கவும் கட்சி வேலைத்திட்டங்களை கிராம மட்டங்களுக்குக் ​கொண்டு செல்லவும் இவ்வாறு அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் கட்சி அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .